Type Here to Get Search Results !

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விசிக தொழிற்சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.


பாலக்கோடு, மே.22:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்க பொதுச்செயலாளர் திருப்பதி தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் செல்லன் முன்னிலை வகித்தார்.


பேரவை பொதுச்செயலாளர் பேரறிவாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொழிற்சங்க நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிதிச் செயலாளர் செந்தில்குமார், கர்நாடகா மாநில எஸ்.சி., எஸ்.டி. மாநில தலைவர் மூர்த்தி, மாநில செயலாளர் பழனிசாமி, மின்னல்சக்தி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், முருகேசன், செந்தமிழ், மகேஸ்வரி, அப்துல்சலாம், வால்டர்குமார், ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் ஒன்றிய செயலாளர்கள் ஞானபழனி, தமிழ்தேசியன், முனிராஜ், பாபாஜான் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் நன்றி உரையாற்றினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies