Type Here to Get Search Results !

பென்னாகரம் ஒன்றியத்தில் முதலிடம் பெற்ற விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு .


பென்னாகரம், மே.22:


பென்னாகரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு விழா நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பான தேர்ச்சி பெற்றனர்.


இதில், பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன்றிய அளவில் அதிக மதிப்பெண் பெற்று மாணவி அமிதா 494 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். அதேபோல், அரித் 479 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், தர்ஷன் 476 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றனர். இந்த சாதனையை பாராட்டும் வகையில் நடைபெற்ற விழாவில், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சிவன் மற்றும் பள்ளியின் உரிமையாளர், தாளாளர் முருகன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி, பொன்னாடை அணிவித்து, மாலை சூட்டி கௌரவித்தனர். மேலும், மாணவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் சரவணன், பள்ளி முதல்வர் மாணிக்கம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies