Type Here to Get Search Results !

மலை கிராம பழங்குடியினர் குழந்தைகளுக்கு “கனவுச் சிறகுகள்” கோடை முகாம்; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


அரூர், மே.22:


மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் குழந்தைகளின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் “கனவுச் சிறகுகள்” என்ற பெயரில் சிறப்பு கோடை கொண்டாட்ட முகாம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கலைக்குழுவினரின் மூலம் கதை உருவாக்குதல், நாடக பயிற்சி, பாரம்பரிய கலைகளான கோலாட்டம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு குழந்தையும் தங்களுடைய வாழ்க்கை இலக்கை நிர்ணயித்து வெற்றிக்கதைகளை உருவாக்குவது எப்படி என்பது குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதனுடன் விளையாட்டு பயிற்சிகள், ஆடல்–பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு செயல்பாடுகளும் நடத்தப்பட்டன. முகாமில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு நாள் நடைபெற்ற “கனவுச் சிறகுகள்” முகாம் நிறைவில், குழந்தைகள் தங்களுடைய எதிர்கால இலக்குகளை தெளிவாக நிர்ணயித்து உற்சாகத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ஸ்ரீ தேவி மஹா டிரஸ்ட் மேற்கொண்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies