Type Here to Get Search Results !

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு. – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மே.12:


தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது உயர்கல்வியில் சேர்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி வாரியாக சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர்வதற்கு முன்னாள் படைவீரர்களின் மகன் அல்லது மகள் என்பதற்கான “Dependent Certificate” பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சான்றிதழைப் பெற விரும்பும் மாணவர்கள், கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு, +2 மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு சான்றிதழ், படைவிலகல் சான்று, அடையாள அட்டை, குடும்ப ஓய்வூதிய ஆணை (PPO), ஆதார் அட்டை, PART II ORDER மற்றும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்தான் என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies