Type Here to Get Search Results !

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன்.


பென்னாகரம், மே.16:


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கஜேந்திரன், சட்டமன்ற நிகழ்வுகளை முடித்துக்கொண்டு நேற்று பென்னாகரம் வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து இன்று முதல் பணியாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற அவர், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்களிடம் சிகிச்சை முறை, மருத்துவ வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடமும் நேரடியாக குறைகள் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்தார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies