Type Here to Get Search Results !

தருமபுரியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட செயலாளர் தேர்தல்; ராஜ்குமார் வெற்றி பெற்றார்.


தருமபுரி, மே. 24:


தருமபுரியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற்றதில், அதிக வாக்குகள் பெற்று ராஜ்குமார் வெற்றி பெற்றார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில், சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளின்பேரில் மாநிலத் தலைவர் சுபாஷ் உத்தரவின்படி மாவட்ட செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து நடைபெற்ற தேர்தலில், சங்க உறுப்பினர்களான கண்ணையன், ரவிச்சந்திரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மாவட்ட செயலாளர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் 53 பேர் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிக வாக்குகள் பெற்று ராஜ்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


வெற்றி பெற்ற ராஜ்குமார், “என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் ராஜ்குமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


மேலும், தேர்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்களித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies