அரூர், மே. 24:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சங்கிலிவாடி பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார். அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவிந்தன், அசோக், தமிழரசன், சென்னன், கரியபெருமாள், ஒப்பந்ததாரர் குணஷியா ரகுநாத், செல்லை சீனு, குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)