Type Here to Get Search Results !

தொப்பூர் சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம்: தருமபுரி காவல்துறை எச்சரிக்கை.


தருமபுரி, மே.23:


தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 22.05.2026 அன்று கண்டெய்னர் வாகனத்தில் எருமை மாடுகள் மற்றும் பசு மாடுகள் கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில், மாடுகளை உரிய அனுமதி மற்றும் தேவையான பராமரிப்பு இல்லாமல் கொண்டு சென்றதாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும், அந்த சம்பவத்தில் மாடுகளை ஏற்றி வந்த வாகனத்தை சிலர் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அதுகுறித்தும் தனியாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவைற்ற வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.


எனவே, பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டு தரப்பினரின் புகார்களின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies