பாலக்கோடு, மே.17:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000–2001 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது 38 மாணவிகள் மற்றும் 50 மாணவர்கள் என மொத்தம் 88 பேர் கல்வி பயின்ற நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றுகூடிய முன்னாள் மாணவர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தலைவர் சக்திவேலன் முன்னிலை வகித்தார். மேலும், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் தற்போது பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)