அரூர், மே.17:
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான புத்தர் பண்பாட்டு விளையாட்டு போட்டியில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், அரசு வழக்கறிஞர் நந்திவர்மன் மற்றும் தலைமை ஆசிரியர் மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் தடகள மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
சீனியர் பிரிவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வம் முதலிடம் பெற்றார். அதே போட்டியில் இளவழகன் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும் நீளம் தாண்டுதல் போட்டியிலும் செல்வம் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி துரை, கலைமன்னன், முருகேசன் ஆகியோர்களையும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாவாசா, சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)