அரூர், மே.19:
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள கீழ்செங்கப்பாடி கிராமத்தில் விவசாய கிணற்றில் சிக்கியிருந்த 6 அடி நீள முதலை ஒன்றை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து உயிருடன் மீட்டனர். கீழ்செங்கப்பாடியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் என்பவரின் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் முதலை இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுலுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் முதலில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் சுமார் 30 கிலோ எடை கொண்ட முதலை உயிருடன் மீட்கப்பட்டது. தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அருகிலுள்ள ஓடை வழியாக முதலை கிணற்றுக்குள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதலை பாதுகாப்பாக தென்பெண்ணையாறு பகுதியில் விடப்படும் எனவும் கூறினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

