கடத்தூர், மே.20:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சிக்குட்பட்ட டி. அய்யம்பட்டி பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூடம் மிகவும் அசுத்தமான மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்த நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பேருந்து நிறுத்தம் சுற்றுவட்டாரத்தில் மண்புழுதி அதிகமாக கிளம்புவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அய்யம்பட்டி, கந்தகவுண்டனூர், பசுவாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி பல்வேறு ஊர்களுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் பயணிகள் ஒதுங்க கூட வசதி இல்லாததால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, பயணியர் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைத்து, சுகாதார வசதிகள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

