தருமபுரி, மே.19:
தருமபுரி மாவட்டம் தருமபுரி – பென்னாகரம் சாலையில் உள்ள குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 30 வயது இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதை கண்ட பொதுமக்கள் தருமபுரி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து தருமபுரி நகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த அருண்தாஸ் (30), தந்தை மணி என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சடலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணம் விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

