Type Here to Get Search Results !

தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, மே 30:


தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அறக்கட்டளையின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், சட்ட தூண்கள் அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் மற்றும் பணிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


அத்துடன், சமூக நலன், சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில் அறங்காவலர்கள் முத்து, அருள், குமரவேல், மாநிலச் செயலாளர் மணி, மாநில பொருளாளர் காவேரி, தருமபுரி மாவட்டத் தலைவர் பி.கே. சிவா, மாவட்டச் செயலாளர் நாகராஜ், இளைஞர் அணி செயலாளர் கணேஷ், விவசாய அணி தலைவர் முனிராஜ், துணைச் செயலாளர் ரோஹித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies