பாலக்கோடு, மே 30:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் பொதுமக்களுக்கான இலவச தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு பயிற்சி வகுப்புகள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் திருத்தணிமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "வாங்க கற்றுக்கொள்ளலாம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தீ விபத்துகளைத் தடுக்கும் முறைகள், அடிப்படை தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், தீ விபத்துகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை செயல்பாடுகள், தீயை அணைக்கும் பல்வேறு முறைகள் மற்றும் தீயணைப்பு கருவிகளின் வகைகள், அவற்றை சரியாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு நேரடி செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும். தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர காலங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும் இந்த பயிற்சி உதவும் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)