Type Here to Get Search Results !

சாமத்தால் கிராமத்தில் ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு.


பென்னாகரம், மே 30:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாமத்தால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன், ஸ்ரீ நவகிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மனுக்கு பால் அபிஷேகம், தீர்த்த அபிஷேகம், திருநீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சின்னப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பெரும்பாலை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies