Type Here to Get Search Results !

ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி 10ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை.


நல்லம்பள்ளி, மே.20:


தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர். இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர். கனிஷ்கா 498 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பிடத்தையும் பெற்றுள்ளார். மாணவர்கள் வி. கவியதர்ஷினி, ஏ. இளவெண்பா, எம். பார்கவி, எஸ். நித்தின்குமார், பி. லோகதீபன், பி. பரஜ்வால், பி. ஜதீஷ் ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.


மேலும், ஆர். மதிஷா, ஏ. ரூபாஸ்ரீ, சி. அனுராதா மற்றும் ஐ. பிரதீஸ் ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். கணிதத்தில் 45 மாணவர்கள், அறிவியலில் 148 மாணவர்கள், சமூக அறிவியலில் 80 மாணவர்கள் மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் தலா ஒருவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


495க்கு மேல் 24 மாணவர்கள், 490க்கு மேல் 95 மாணவர்கள், 480க்கு மேல் 237 மாணவர்கள் மற்றும் 470க்கு மேல் 352 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் சதவீதம் 88.2 ஆகும். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத் தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குநர்கள், டீன்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies