இண்டூர், மே.20:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நத்ததஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரிகள் தொடர்பாக முகநூல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், கல்குவாரிகள் விவசாய கிணறுகளை விட அதிக ஆழத்தில் செயல்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்து வருவதாகவும், கிணறுகளில் நீர்ஊற்று முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி, விவசாயிகள் நிலங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் உப்புநீராக மாறியதால் மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், கனரக வாகனங்களால் தூசி மாசு அதிகரித்து சுவாச மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்ததாகவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
“ஒரு சிலரின் லாபத்திற்காக கிராம மக்களின் வாழ்வாதாரமும் உடல்நலனும் பலியாக்கப்படுகிறதா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ள அந்த பதிவு, கல்குவாரிகளுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்காமல், எளிய மக்களின் வாழ்வுரிமையை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)