Type Here to Get Search Results !

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக பென்னாகரத்தில் மருந்துக் கடைகள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


பென்னாகரம், மே.20:


நாடு முழுவதும் நடைபெற்ற மருந்துக் கடைகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக, பென்னாகரம் மண்டல மருந்து வணிகர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. ஆன்லைன் மருந்து விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் ஆன்லைன் மூலம் எளிதில் கிடைப்பதால் இளம் தலைமுறை பாதிக்கப்படுகிறது என்றும், போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மருந்து வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.


மேலும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் உயிரிழப்புகள் மற்றும் சமூக சீரழிவுகள் ஏற்படுகின்றன என்றும், மின் மருந்தக செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் பென்னாகரம் மண்டல மருந்து வணிகர் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் ராஜிகண்ணு, பொருளாளர் கோவிந்தராஜ், இணை செயலாளர்கள் பிரதீப் குமார், துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies