தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில் அரசுக்கு உரிமையாக்கப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் ஜூன் 10, 2026 அன்று காலை 11.00 மணிக்கு, தருமபுரி-சேலம் சாலையில் உள்ள 5K Cars Service Centre வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் இடம்பெறும் வாகனங்கள்
| வரிசை எண் | குற்ற எண் | பதிவு எண் | வாகன வகை |
|---|---|---|---|
| 1 | 74/2025 | TN 24 AJ 3054 | Honda Dio |
| 2 | 91/2025 | KA 04 MQ 6011 | Tata Indica Car |
| 3 | 94/2025 | TN 29 CD 7193 | Maruti Suzuki Eeco |
| 4 | 99/2025 | TN 29 CS 2836 | Ashok Leyland Dost |
| 5 | 121/2025 | KA 12 A 5406 | Bolero Pickup |
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் குறிப்பிட்ட நாளில் நேரில் கலந்து கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஏலத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)