Type Here to Get Search Results !

தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா: 106 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


தருமபுரி, மே.27:


தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (27.05.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு திரு. ஸ்ரீதரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இந்த பெட்டிஷன் மேளாவில் பொதுமக்கள் அளித்த 106 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்து 106 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், இன்று புதிதாக 39 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies