பாலக்கோடு, மே.12:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், கடந்த மாதம் மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பெண்களின் கவுரவம் மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக மக்கள் வாக்களித்து மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாஜக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நத்தகிரி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பிரேமா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம் ஆனந்த், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நகர கிளை தலைவர் பெரியண்ணன், நகர கிளை செயலாளர் முருகன், அலகுபெருமாள் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)