Type Here to Get Search Results !

பைசுஹள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை தொடக்கம்.


தருமபுரி, மே.21:


தருமபுரி மாவட்டம் பைசுஹள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் கல்லூரிக்கு நேரில் வந்து உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 வங்கி கணக்கு மூலம் செலுத்த வேண்டும். SC/ST பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கைக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. (ITI) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாள் வரும் 25.05.2026 மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக ரூ.2282 வசூலிக்கப்படும். மேலும் கல்வி உதவித்தொகைகள், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச பேருந்து வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies