Type Here to Get Search Results !

மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் NFDP போர்ட்டலில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, மே.21:


தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) மூலம் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி மத்சயா சம்பட யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ், மீனவர் மற்றும் மீனவ மகளிர்களுக்கு வழங்கப்படும் குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வரை காப்புறுதி தொகையும், பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.2.50 லட்சமும் வழங்கப்படும். மேலும் மருத்துவ செலவுகளை ஈடு செய்ய ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.


NFDP போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும் என்பதால், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர் மற்றும் மீனவ மகளிரும் தங்களது விவரங்களை வரும் 31.05.2026க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பழைய கட்டிடம்), 2ஆம் தளம், தருமபுரி – 636705 என்ற முகவரியிலோ அல்லது 04342-232311, 82201 87287 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies