Type Here to Get Search Results !

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய “மை தருமபுரி” அமைப்பினர்.


தருமபுரி, மே.24:


தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேய சேவைகளை தொடர்ந்து செய்து வரும் “மை தருமபுரி” அமைப்பினர், ஏழ்மை நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.


மை தருமபுரி அமைப்பின் சார்பில் தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்றோரின் உடல் நல்லடக்கம், ரத்ததான சேவை, கல்வி சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, தாய்ப்பால் தான விழிப்புணர்வு, கூந்தல் தானம் மற்றும் பேரிடர் மேலாண்மை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மலைவாழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலங்கி வழங்கியிருந்த அமைப்பினர், தற்போது தருமபுரி பகுதியில் பொருளாதார வசதி குறைவாக உள்ள 10 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.


மாணவர்களுக்கு புத்தகப்பை, எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டதுடன், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் நல்ல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபக் கலந்து கொண்டார். மேலும், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் முனைவர் கிருஷ்ணன், செந்தில், கணேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies