அரூர், மே. 24:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டியில் “ஜெய்பீம்” இரவு பாடசாலை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ஜீ. ஜீவானந்தன் வரவேற்புரை ஆற்றினார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் கலந்து கொண்டு இரவு பாடசாலையை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்ட அவர், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். போட்டித் தேர்வுகள், வங்கி தேர்வுகள், காவலர் தேர்வுகள் மற்றும் யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கான பல்வேறு புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற்றுள்ளதால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. அன்பு, தொழிலதிபர் பெ. சரவணன், து. பூவரசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் மு. சிவராமன், ஓய்வுபெற்ற பொறியாளர் பெ. சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பெ. கேசவன், ப. ராஜசேகர், வே. தனசேகரன், ஆசிரியர் சி. மகேந்திரன், மு. சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச. அழகுராமன், எம். சிலம்பரசன், ஊராட்சி செயலாளர் முரளி, காவலர் சு. பிரவின்குமார், சமூக செயற்பாட்டாளர் எ.கொ. அம்பேத்கர், ஆசிரியர் செந்தில், தொழிலதிபர் பா. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக முதுகலை ஆசிரியர் தொ. சுதாகர் நன்றி கூறினார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)