தருமபுரி, மே.17:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரது புனித உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் உயிரிழந்த நபர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், மை தருமபுரி அமைப்பினர் சார்பில் பச்சையம்மன் கோயில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பொம்மிடி காவல் நிலைய காவலர் சரத்குமார், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 214 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

