தருமபுரி, மே.17:
இறைநிலை அடைந்த நுண்துகள் விஞ்ஞானி டாக்டர் அழகர் இராமானுஜம் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட சமூக சேவை அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. எண்ணங்களின் சங்கமம் NDSO அமைப்பின் ஜெ. பிரபாகர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கயல் குழும நிர்வாக இயக்குநர் இல.வெ. அறிவழகன், ஆதி பவுண்டேஷன் இயக்குநர் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
மேலும், சமூக சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு டாக்டர் அழகர் இராமானுஜம் அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர். நிகழ்ச்சியை NDSO ஒருங்கிணைப்பாளர் வெ. பிரகாஷ் வரவேற்றார். மை தருமபுரி அமைப்பின் இயக்குநர் சதீஸ் குமார் ராஜா நிகழ்வை ஒருங்கிணைத்து நன்றி தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)