தொப்பூர், மே.13:
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தர்கா செல்லும் சாலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவரின் புனித உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால், உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் உறவினர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மை தருமபுரி அமைப்பினர் சார்பில் பச்சியம்மன் கோவில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தொப்பூர் காவல் நிலைய காவலர் பிரியா, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கணேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 213 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)