Type Here to Get Search Results !

தருமபுரியில் ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை.


தருமபுரி, மே.22:


தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 18 ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி சட்டத்தின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


ரவுடிசம், கஞ்சா விற்பனை, போதை பொருள் கடத்தல், வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தருமபுரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies