Type Here to Get Search Results !

கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்; நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கும் வாய்ப்பு.


கடத்தூர், மே.22:


தருமபுரி மாவட்டம் கடத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த கல்லூரியில் சிவில் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் (EEE), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் (ECE), கம்ப்யூட்டர் என்ஜினியரிங் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் (DMT) உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ படிப்பை முடித்தவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு பட்டயப்படிப்பில் (Spot Admission) சேரலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாமாண்டு மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tnpoly.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும், கல்லூரியிலும் நேரடியாக விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கல்லூரியில் நவீன ஆய்வகங்கள், வசதியான வகுப்பறைகள், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென தனித்தனி விடுதிகள், குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு ஏற்பாடுகள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் தகவல்களுக்கு 9500008791, 9080139880, 8508168390, 7338900733 மற்றும் 04346-265355 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies