ஒகேனக்கல், மே.18:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையோரம் இளைப்பாறும் யானைகளுடன் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து வருவது கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல் வனச்சாலையை கடந்து செல்லும் யானைகள் கூட்டமாக மர நிழல்களில் இளைப்பாறி வரும் நிலையில், சிலர் வாகனங்களை நிறுத்தி யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதுடன், சத்தமிட்டு விரட்டும் செயல்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதனால் யானைகள் கோபமடைந்து தாக்கும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ஒகேனக்கல் வனச்சாலையில் வனத்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிர்ப்பலி ஏற்படும் முன் விழிப்புணர்வு பலகைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)