Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சந்தை மதுவிற்பனை தடுப்பில் காவல்துறை தீவிரம்.


தருமபுரி, மே.18:


தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கள்ளச்சந்தை மதுவிற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன், IPS அவர்களின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சிறப்பு சோதனைகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 நபர்கள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 1102 மதுபாட்டில்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மேலும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


தொடர்ந்து கள்ளச்சந்தை மது விற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தருமபுரி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies