Type Here to Get Search Results !

பாலக்கோடு வனப்பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவிப்பு.


பாலக்கோடு, மே.13:


பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தமிழக வனத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பில், யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தனியாக அல்லது இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், யானைகள் செல்லும் பாதைகளை மறிக்காமல் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரவு நேரங்களில் குறிப்பாக மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பட்டாசு வெடித்தல், கல்லெறிதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அவசர காலங்களில் தொடர்புகொள்ள: 7339550107, 9843522342, 8838384521, 6381266342, 9750299102, 9976042406, 9994879613, 7449183589, 9943941313, 9894687635, 8072604137, 6379377033 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies