தருமபுரி, மே.13:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (13.05.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் “பெட்டிஷன் மேளா” நடைபெற்றது. இந்த முகாம், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. சோமசுந்தரம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதரன் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட 144 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், புதிதாக 35 மனுக்கள் பெறப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)