பாலக்கோடு, மே.15:
தருமபுரி மாவட்டத்தில் அதிமுகவின் புதிய கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் நகர செயலாளர் ஜி. சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பின்படி, பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் அரூர் பகுதிகளுக்கான மேற்கு மாவட்ட செயலாளராக டி.ஆர். அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கான கிழக்கு மாவட்ட செயலாளராக மருத்துவர் அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை வரவேற்று அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் கிரி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் எம்.பி. சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நஞ்சுண்டன், முன்னாள் கவுன்சிலர் முருகன், மணிவண்ணன், இடும்பன் சண்முகம், நடிகர் நாகப்பன், சின்னபையன், மெடிக்கல் செந்தில், சரவணன், ஜெகன், மகேந்திரன், கணேசன், கோகுல், வெங்கட், கலை உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)