தருமபுரி, மே.18:
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காசநோய் பிரிவில் காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 55 காசநோய் பயனாளிகளுக்கு, தருமபுரி மண்டல கனரா வங்கி அலுவலகத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) மருத்துவர் எம். பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
மேலும், நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் காசநோய் பரிசோதனை செய்து கொண்டு, தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தடுப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிகிச்சை காலம் முழுவதும் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தருமபுரியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)