Type Here to Get Search Results !

தருமபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்தனர்.


தருமபுரி. மே.20:


தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2025–2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியின் மாணவிகள் ஸ்ரீ நிதவர்ணா மற்றும் கோபிகா ஸ்ரீ ஆகியோர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் 1ஆம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவிகள் லஷ்மிதா மற்றும் சுமையா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளனர்.


மேலும், மேகவர்ஷினி மற்றும் நிகில் பிரசாத் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3ஆம் இடம் பெற்றுள்ளனர். 490க்கு மேல் 22 மாணவர்கள், 480க்கு மேல் 57 மாணவர்கள், 470க்கு மேல் 96 மாணவர்கள் மற்றும் 460க்கு மேல் 124 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 10 மாணவர்கள், அறிவியலில் 43 மாணவர்கள் மற்றும் சமூக அறிவியலில் 21 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனங்களின் தலைவர் செந்தில் சி. கந்தசாமி சால்வை அணிவித்து பாராட்டினார்.


இந்நிகழ்ச்சியில் செந்தில் குழும துணைத் தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் ரபீக் அகமத், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies