Type Here to Get Search Results !

தருமபுரி ஒருங்கிணைந்த மருத்துவமனை சேவை மையத்தில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, மே.20:


தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) திட்டத்தில் காலியாக உள்ள வழக்கு தொழிலாளி (Case Worker) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்த பணியிடம் 24x7 அடிப்படையில் செயல்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மாத சம்பளமாக ரூ.18,800 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு காலிப்பணியிடம் உள்ளது. சமூகப்பணி (MSW) அல்லது உளவியல் ஆலோசனை தொடர்பான முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், உள்ளூர் விண்ணப்பதாரராக இருப்பதுடன், வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு உதவி புரிந்த அனுபவம் மற்றும் ஆலோசனை வழங்கிய குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம் என கூறப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்களின் வயது 38-க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை தருமபுரி மாவட்ட இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.05.2026 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி – 636705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies