Type Here to Get Search Results !

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் மாபெரும் சாதனை படைத்தது.


தருமபுரி, மே.08:


தருமபுரி நகரில் செயல்பட்டு வரும் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளியின் மாணவி ஹரிவாஷினி 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். மாணவன் கௌதம் 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றார். மாணவிகள் நேனுகுமாரி மற்றும் லட்சுமி பிரபா ஆகியோர் தலா 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.


மேலும், 590 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்கள், 580க்கு மேல் 11 மாணவர்கள், 570க்கு மேல் 24 மாணவர்கள், 560க்கு மேல் 45 மாணவர்கள், 550க்கு மேல் 58 மாணவர்கள் மற்றும் 500க்கு மேல் 166 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பாட வாரியான நூற்றுக்கு நூறு மதிப்பெண்களில் கணிதம் – 1, உயிரியல் – 1, கணினி அறிவியல் – 5, கணக்கு பதிவியல் – 3, பொருளியல் – 4, வணிகவியல் – 5 மற்றும் கணினி பயன்பாடு – 1 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


இந்தப் பள்ளி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக +2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை செந்தில் பள்ளி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி பாராட்டினார். செந்தில் குழுமத் துணைத் தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் ரபிக் அஹமத், முதல்வர் வள்ளியம்மாள், நிர்வாக முதல்வர் ஓங்காளி, மேல்நிலை பிரிவு முதல்வர் திருநாவுக்கரசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies