Type Here to Get Search Results !

தருமபுரியில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்: ஜூன் 10-ல் நடைபெறுகிறது.


தருமபுரி, மே 30:


தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1955-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது மாவட்ட நிருவாகம் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, வரும் ஜூன் 10, 2026 அன்று காலை 11.00 மணிக்கு, தருமபுரி-சேலம் சாலையில் அமைந்துள்ள 5K Cars Service Centre வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 6 வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.


ஏலத்தில் இடம்பெறும் வாகனங்கள்

நான்கு சக்கர வாகனங்கள்:

  • TN 30 BL 9922 – Eicher Lorry
  • TN 31 H 6760 – Eicher Van
  • TN 29 AM 2233 – TATA ACE


இருசக்கர வாகனங்கள்:

  • பதிவு எண் இல்லாத TVS XL Super Heavy Duty
  • TN 29 CX 8391 – TVS XL Super Heavy Duty
  • TN 70 J 4799 – TVS XL Super Heavy Duty


ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் குறிப்பிட்ட நாளில் நேரில் கலந்து கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies