Type Here to Get Search Results !

சனத்குமார் நதி தூர்வாரும் பணி மற்றும் அரூரில் ரூ.21.60 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


தருமபுரி, மே.08:


தருமபுரி மாவட்டம் ஏமகுட்டியூர் பகுதியில் உள்ள சனத்குமார் நதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அரூர் நகராட்சி பகுதியில் ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்.


சனத்குமார் நதி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், சுமார் 8.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நதிக்கரைகள் பலப்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தருமபுரி நகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் வகையில் இந்த நதியை புதுப்பொலிவுடன் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.


இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. முதல் கட்டமாக உங்கரானப்பள்ளி முதல் விருப்பாச்சிபுரம் வரை சுமார் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


மேலும், வத்தல் மலையிலிருந்து கூடுதுறை தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் வரை மொத்தம் 46 கிலோ மீட்டர் நீளமுள்ள சனத்குமார் நதியில், தற்போது முதல் கட்டமாக 8.5 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, அரூர் நகராட்சி பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


அதேபோல், அரூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகரில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், வள்ளிமதுரை கிராமத்தில் உள்ள வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளும் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமார், தருமபுரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, அரூர் நகராட்சி ஆணையாளர் வே. விஜயாஸ்ரீ, வட்டாட்சியர் ஜெ. சுகுமார், ஆதி பவுண்டேஷன் தலைவர் ஆதிமூலம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies