வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளம் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், www.tnvelaivaaippu.gov.in இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களது சேவைகளை நேரடியாக மேற்கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போலியான விளம்பரங்கள் அல்லது இடைத்தரகர்களை நம்பி தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணத்தை வழங்கி ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் வேலைவாய்ப்பு சேவைகள் அனைத்தும் இலவசமாக கிடைப்பதால், சந்தேகப்படும் நபர்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

