தருமபுரி, மே.19:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.05.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.
பள்ளிப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமானது என்றும், இதில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

