தருமபுரி, மே.19:
தருமபுரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். மேலும், கணினி தட்டச்சு பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயது 40க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் 02.06.2026 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், தருமபுரி – 636705 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 63826 12276 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)