Type Here to Get Search Results !

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்த KP. அன்பழகன் பதவி பறிப்பு: தருமபுரி அதிமுகவில் அதிரடி மாற்றம்.


தருமபுரி, மே.13:


சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின் உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


அதிமுக தலைமையின் முடிவுக்கு மாறாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக பல நிர்வாகிகளின் பதவிகளை பறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் அடிப்படையில், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கே.பி. அன்பழகன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.



மேலும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கான கிழக்கு மாவட்ட செயலாளராக மருத்துவர் அசோகன் (பூக்கடை ரவி) நியமிக்கப்பட்டுள்ளார். பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் அரூர் பகுதிகளுக்கான மாவட்ட செயலாளராக டி.ஆர். அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies