தருமபுரி, மே.25:
தருமபுரி மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பயன்பாட்டில் இருந்து காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் மின்னணு சாதனங்களை கழிவு நீக்கம் செய்ய பொது ஏலம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்ட காவல்துறையில் பயன்பாட்டில் இருந்த பழைய மற்றும் பழுதடைந்த கணினிகள், துணை கருவிகள், உதிரி பாகங்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 05.06.2026 அன்று காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. ஏலத்திற்கு முன்பாக, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்த கழிவு பொருட்கள் 04.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வைக்கப்படுகின்றன.
மேலும், தமிழ்நாடு அல்லது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (State / Central Pollution Control Board) தகுதி சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஏல நாளன்று முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத்தில் வெற்றி பெறுவோர், ஏலத் தொகையுடன் அதற்கான ஜிஎஸ்டி (GST) தொகையையும் முழுமையாக செலுத்தி பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

