தருமபுரி, மே.25:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 521 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும் பட்டா கோருதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்பாகவும் மனுக்கள் அளிக்கப்பட்டன.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கோரி பலரும் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 521 மனுக்கள் வரப்பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திருமதி மு. செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. பெ.கி. கோவிந்தன், உதவி ஆணையர் (ஆயம்) திரு. கோ. கோபு உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)