தருமபுரி, மே.18:
பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுமையான பயன்பாட்டிற்கு வந்த தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் பகுதியில் விபத்து அபாயம் இருப்பதாக இளைஞர் உதயகுமார் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், பேருந்து நிலையம் அருகே போதிய எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேக கட்டுப்பாட்டு அறிவிப்புகள் இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்கள் திடீரென பேருந்துகளை கவனிக்க முடியாமல் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதியதாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு பேருந்து நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதி தெளிவாக தெரியாததால், மேம்பால இணைப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, எச்சரிக்கை பலகைகள், வேகக் கட்டுப்பாட்டு சின்னங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)