தருமபுரி, மே. 17:
தருமபுரி புறவழிச்சாலையில் இளைஞர்கள் மீண்டும் ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதிவேக வீலிங் உள்ளிட்ட சாகசங்களால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகன பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் ராஜா கூறுகையில், “இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என கவலை தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)